ஆதௌ கௌஸல்யா தேவி கர்பஜனனம்
கைகயாநந்த வர்த்தனம் |
மாயி தாடகா ஜீவிதா பகரணம்
அகல்யாஸ் சாப மோசனம்|
கரதூஷண ராவணயயோர் ஹனனம்
ஜனகஸுதா பாலனம் |
ஹ்யேதத் ராமாயண கதா கதிதம்
ஸ்ரீரமே ராம ஜீவா ம்ருதம் |
--00O00--
வாழ்த்துப் பாயிரம் :
முனி சிரோன்மணி நனிநல்கிய நடையின் நாயகன்
தனிப் பெரும்காவியம் துணையா, அன்னவர் நல்ஆசியும்
பனிமலர்ப் பாவைதன் கொழுண ! நின்சரிதை பகர்வான்
கனிந்திடாய் இறைவா ! என்நாவில் இன்கவியாய் எனக்கு !
சதுர்விம்ஸதி இராமாயணம் :
ராமா! இளகிபதித்த மன்னன் ரமித்தனன்
மாதவன் முன்நடந்த கானில் இளையானும்
மாதவன்தன் பின்நடக்க தாடகை -- மாதும்
சுபாகுவும் வீழ்த்து அகலிகை நீஉயிர்த்தாய்!
சோபனமாம் கைகால் கொண்டு - 3.
பரசுடை ராமன் துணிவை அழித்தாய் !
வழிபுகல, அவ்வழியில் அன்னை -- வழங்கும்
பழங்கள் புசித்தருள்வாய்! தன்குருவின் தாள்நயந்தாள்
வாழ சபரிசேர் வீடு. -10.
கணைஒன்றால் வாலியை வீழ்த்தி இளையோன்
''எந்தயே! யானும் உனக்காள் ! என்றுனையே
வந்தித் திசைந்தபின், நம்பு -- நம்பி
-18.
அண்ணல் இராமன் புணர்ப்பெய்தி -- ஒண்டொடியாள்
மங்களம் :
முத்திரைப் பாசுரம் :
மூத்தவர் வார்த்தை இளையவர் ஆற்றுதல்
காத்த இராமன்சீர் ஏலுமிவை - தோத்திரம்
நேர்த்தியோடு ஆமே ! திருநிறை வாசன்தன்
ஆர்த்தி அதிசெயல் பட்டு ! - 26.
--தாசரதி தாஸன்,
{(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாச ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்}.
[K S Srinivasan].
--00O00--
வாழ்த்துப் பாயிரம் :
முனி சிரோன்மணி நனிநல்கிய நடையின் நாயகன்
தனிப் பெரும்காவியம் துணையா, அன்னவர் நல்ஆசியும்
பனிமலர்ப் பாவைதன் கொழுண ! நின்சரிதை பகர்வான்
கனிந்திடாய் இறைவா ! என்நாவில் இன்கவியாய் எனக்கு !
சதுர்விம்ஸதி இராமாயணம் :
தேவரெலாம் வேண்ட தயரதன்தன் புத்திரனாய்
ஆதவன் ஆதி குலத்தே -- அவதரித்தாய்
ஆதவன் ஆதி குலத்தே -- அவதரித்தாய்
''ராமராம'' என்றே துதித்து. - 1.
பகலவன் பார்த்து அலர்கமலம் அன்ன
உகப்பொடு மக்கள் வளர்தர -- ஏகினன்
கௌசிகன்தன் வேள்வியோடு ஐயர்கு சிவன்வில்
ஒசிந்து முடிப்பான் மணம் ! -2. மாதவன் முன்நடந்த கானில் இளையானும்
மாதவன்தன் பின்நடக்க தாடகை -- மாதும்
சுபாகுவும் வீழ்த்து அகலிகை நீஉயிர்த்தாய்!
சோபனமாம் கைகால் கொண்டு - 3.
பரிசென மன்னன் மௌலியுன் -- சிரசிடைத்
தாழ்ப்பான் நினைவதும் கூன்மகள் ஓர்கூற்றால்
பாழ்த்தாய், வனமே புக ! - 4.
கங்கையை காதல் குகன்கடத்த செல்வாயேல்
இங்கு பரதாழ்வான் வாழ்தனனோ ? -- என்கோ! கேள் !
தாயர்சொல் கேட்டு தயரதன் ஈந்தத்தை
நோயென போக விடுத்து. - 5.
பரதநம்பி வந்து பணிதலும், மண்ணாள்
மரவடியை தந்துபோக்கி, பஞ்சவடி -- சேர்ந்தாய் !
வரன்பேசி வந்த சூர்பணகைக் காதுமூக்கும்
குறைப்ப குறித்தாள் பகை. - 6.
பதினாறா மாயிரவர் காற்றளைப் பூளை
கதிகாணப் போர்த்தாய் ! இலங்கைக் -- கதிபதி
வன்மம் துளிர்க்கவே ! சீதைபால் நேராதன
அன்பும் வளர்த்தான் அவன். - 7.
மாயா மிருகம் மருட்சியில் பாய்ந்தலைப்ப
நீயும் நெடுந்தூரம் கடந்தற்பால் -- மாய
வரக்கன் அகம்புகுந்து அன்னையை நச்சி
சிறைகொள சூழ்த்தான் இரந்து . - 8.
வந்தெதிர்ந்த புள்ளரசன் பட்சத்தை வீழவாங்கி
சுந்தரியை கொண்டு தனிச்சிறையில் -- பந்தித்தான் !
அன்னையைத் தேடி அயர்ப் புற்று ஜடாயுவை
கண்ணுற்றாய் ! வாழ்வு மது ! - 9.
வழுத்தி கபந்தன், குரக்கர சன்சேர்வழிபுகல, அவ்வழியில் அன்னை -- வழங்கும்
பழங்கள் புசித்தருள்வாய்! தன்குருவின் தாள்நயந்தாள்
வாழ சபரிசேர் வீடு. -10.
கணைஒன்றால் வாலியை வீழ்த்தி இளையோன்
துணைநின்று பாலித்தாய்! ராமா ! -- கணையாழி
கொண்டேகி சீதை உயிர்மீட்டான் அநுமன் !
''கண்டேன்'' எனவால் உனது. -11.
இச்சையால் தன்னை இசைவிக்க வந்தானை
புல்லிதுபோல் மாள்வதே'' என்று! -12.
ஹனும!நின் சேரடை யாளம் இதுகாண்
வனப்புடைப் பொன்தலைச் சுட்டி. -13.
குரங்குகள் சைலம் திரித்து அணைசெய
வரநின்ற வீடணற்கு தஞ்ச மளித்தாய்!இச்சையால் தன்னை இசைவிக்க வந்தானை
மெச்சலாம் நல்வழி ராமனை - நச்சுதல்
சொல்லினள்! ''உன்னுயிர்க்கு உற்றது அஃதலால்
அலைந்துழன்று ஆற்றாதே தாளீணைக்கீழ் காகம்
தலைசாய்ப்ப வாழ்வித்தான் அன்றெம் -- தலைவன் ! ஹனும!நின் சேரடை யாளம் இதுகாண்
வனப்புடைப் பொன்தலைச் சுட்டி. -13.
குரங்குகள் சைலம் திரித்து அணைசெய
ஓரத்த தோர்அணிலம் ஆங்கே -- புரண்டிட்டு
மண்பாவி நற்றுணை போக, இராமனும்
அன்போடு தொட்டிட்டான் கோடு. -14.
குரக்கதால் முந்நீர் அணைகட்டி -- நேரா
நிசாசரனை நீறு செயவே படைதொட்டாய் !
பூச்சொரிவர் விண்ணோர் புகழ்ந்து ! -15.
இராவணன் பட்டான் அதுஎம் பிழைப்போ?
இராக்கதர் எம்மை குரக்கினம் --தூற
அகல்வான் வகையும் அறிகிலம் அத்தால்
புகல்நீ இராமா எமக்கு ! - 16
சரணே சரணென்று வந்தக்கால் ஏனே
வரிலும் தாழ்கொடான் என்று . - 17.
அன்னை அவள்தன் அருளுக்கு ஆளாமால்
''என்ன இவன்பாபம்? யாரது -- தன்னை
செய்வதிலர்? என்பளே போலுமே. தம்மை
நைவார் திறத்தும் அவள் !
ஜானகி தீயில் குளிப்ப அவள்தூயள்
ஆன படியோ? இளையானை -- கானில்
வசைமொழிந்த காரணமோ? மற்றெவர் ஏச்சுக்
கிசைகிலா திஃது உரை? -19.
கிசைகிலா திஃது உரை?
பரதன் அழலின் பிழைப்ப அனுமன்
துரிதலும், புட்பக ஊர்திமேல் -- ஊர்ந்தாய்நீ !
பூசித்து புநிதநீ ராட்டி அரியணைமேல்
வசிட்டன் புனைந்தான் மௌலி. -20.
வண்ணான் ஒருவன் இகழ்வுக்கு ஏலாது அண்ணல் இராமன் புணர்ப்பெய்தி -- ஒண்டொடியாள்
தேவியை தொல்கானம் சேர்வித்தான், வான்மீகி
காவியத்தாய் கண்கள் பனித்து . - 21.
மக்கள் இருவரை ஈன்றனள் அன்னை !அம்
மக்கள் இருவரும் வில்லாற்றல் -- மிக்கு
வளர்தர, வேள்விப் பசுவைப் பிணைத்துக்
கிளர்ந்தனர், தாதைக் குகப்பு. - 22.
அடிச்சியாய் முற்படத் தேவி பிரிகை,
அடிச்சியாய் முற்படத் தேவி பிரிகை,
தொடர்ச்சியாய் கானகத் தேகி - இடர்தலிவை
'தன்னை' இராமன் பணித்தது ஏலவே !
பின்னை தரியாப் பிரிவு. - 23.
தம்மக்கள் அம்பவள வாய்க்கொண்டு தன்சரிதை
அம்ம!அவன் கேட்க,பின் சீதையை -- எம்மான்!
பிரியலுற்றுத் தாழ்த்தான், தம்பியை என்று
பிரிவனோ அன்றவன் வீடு. - 24.மங்களம் :
கோசல ராமா ! உனக்குஎன் மங்களம் !
பாசமோ டானகுணக் குன்றுக்கு -- நேசமான
மங்களம்! யாண்டும் தசரதன் மைந்தனுக்கு
மங்களம் தங்கவே மிக்கு !!! -25.முத்திரைப் பாசுரம் :
மூத்தவர் வார்த்தை இளையவர் ஆற்றுதல்
காத்த இராமன்சீர் ஏலுமிவை - தோத்திரம்
நேர்த்தியோடு ஆமே ! திருநிறை வாசன்தன்
ஆர்த்தி அதிசெயல் பட்டு ! - 26.
{(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாச ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்}.
[K S Srinivasan].
No comments:
Post a Comment